கப்பல் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும்


 நியூ டயமன் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று வரை ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகளவான கடல் நீர் பாய்ச்சப்பட்டுள்ளது.


எவ்வாறிருப்பினும் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என விமானப்படை பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,


கப்பல் தீப்பற்றியமை தொடர்பில் கடற்படையினரால் அறிவிக்கப்படவுடனேயே விஷேட விமானமொன்று நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கண்காணிப்பு அறிக்கை கடற்படைக்கும் விமானப்படை தலைமையகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


குறித்த விமானம் வியாழக்கிழை காலை முதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு உதவியாக பிரதொரு விமானமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இவை இரண்டும் 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கண்காணிப்பு அறிக்கைகள் புகைப்படங்கள் என்வற்றை எமக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.


இவை தவிர மேலும் இரு உலங்கு வானூர்திகள் அம்பாறையை மையப்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு இலட்சம் லீற்றருக்கும் அதிகளவான நீர் பாய்ச்சப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


கேள்வி : இந்த தீயைக்கட்டுப்படுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் ?


பதில் : இதற்கு முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது தீயை அணைப்பதற்கு 10 நாட்கள் சென்றன. இந்த தீயை அணைப்பதற்கும் அந்தளவான காலம் செல்லக் கூடும். தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே புகையும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.