20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மேலும் ஆறு மனுக்கள் தாக்கல்!
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று(வெள்ளிக்கிழமை) 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரை 18 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் 29ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த பரீசிலனை நடவடிக்கைக்காக ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழமொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி முன்னாள் ஆளுநரும் மற்றும் கெஃபே அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ரஜித் கீர்த்தி தென்னகோனால் உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்களின் ஊடாக இந்நாட்டு அரசியலமைப்பு கடுமையாக மீறபடுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாக குறித்த சரத்துக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதாது எனவும் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லுமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் உயர்நீதிமன்றில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை