கிரானில் 20 ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்ய ஆயத்தம்!

 

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் மற்றும் வாழைச்சேனை கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் பெரும்போக பயிற்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது

இதன்போது இப்பிரதேசத்தில் 20 ஆயிரத்து 952 ஏக்கர் விவசாய நிலங்களில் பெரும்போக பயிற்செய்கை பண்ணப்படுவதற்கான முன்னாயத்தங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மானிய உர விநியோகம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவ்விவசாய நிலங்களில் சிறிய நீர்ப்பாசன குளங்கள் மூலமாக நீரைப் பெற்றுக் கொள்ளும் 2097 ஏக்கர் நிலத்திலும், மானாவாரி 15 ஆயிரத்தி 910 ஏக்கர் நிலத்திலும், மேட்டு நில பயிற்செய்கையானது 2945 ஏக்கரிலும் நெற்செய்கை பண்ணப்படவுள்ளது.

இப்பயிர் செய்கை நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இம்முறை மானியமாக வழங்கப்படும் இரசாயணப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும், மறுபயிர் செய்கை பன்னுவதற்கு ஆர்வ மூட்டப்பட்டதுடன், விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.