சூர்யாவுக்கு ஆதரவாக ஆறு நீதிபதிகள் கடிதம்!!

 


நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம்


இந்த நிலையில் சூர்யாவுக்கு எதிராக ஒரே ஒரு நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆறு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கூட்டாக சூர்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கூட்டாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக் வேண்டாம்’ என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் 4 மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளனர்.


நீட்தேர்வு எதிராக சூர்யா தெரிவித்த கருத்துக்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளதை அடுத்து தற்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.