மலேசியாவில் கணவன் அடித்துக் கொலை - கதறும் மனைவி!!

 


மலேசியாவில் அகதி தஞ்சம் கோரி வசித்து வந்த தனது கணவர் சில இளைஞர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கிண்ணியடியை பிறப்பிடமாகவும் செங்கலடியை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் போராளியான 37 வயதுடைய கணபதிப்பிள்ளை விவேகானந்தன் (ராசகரன்) என்னும் நபர் மலேசியாவில் கடந்த மூன்றாம் திகதி மலேசியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.

UNHCR ஊடாக தஞ்சம்கோரி கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்துவந்த இவர் கடந்த 8 வருடங்களாக மலேசியாவில் ஜோகூர் மாசை எனுமிடத்தில் உணவகமொன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.

இத்தருணத்தில் கடந்த 3ம் திகதி அதிகாலை 2 மணியளவில் உணவகத்தை மூடிவிட்டு முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்ததிருந்த வேளை சில மலேசிய இளைஞர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடுதிரும்பிய நிலையில் கடந்த 6ம் திகதி திடீரென மரணமடைந்துள்ளார்.

தனது கணவருக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் அவரது மனைவி மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

எட்டு ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பத்து வயது மகனுடன் வசித்து வரும் அவரது மனைவிக்கு தனது கணவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது கணவரின் சடலத்தை தன்னிடமே தருமாறு இறந்தவரின் மனைவி தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். மரணம் தொடர்பாக மலேசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைப் பிரஜையான விவேகானந்தனின் கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்த வேண்டுமென மலேசிய உலக மனிதநேய இயக்கதின் தலைவர் டி.கமலநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரது மரணம் தொடர்பாக செந்தூல் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக கமலநாதன் தெரிவித்துள்ளார்.

தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கமலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் இறந்தவரின் மனைவி பிருந்தாஜினி எமது செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

தான் இச்சம்பவம் தொடர்பாக UNHCR இல் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தனது கணவரின் பூதவுடல் தனக்குத்தேவையென்றும், தனது 10 வயது மகன் அப்பா இன்னும் உயிருடன் இருக்கின்றார் என நம்பிக்கைகொண்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தூதரகம் சடலத்தை பெற்றுத்தருவதாகவும், மலேசியாவில் உள்ள சில தன்னார்வ நிறுவனங்களும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனக்கு எப்படியாவது தனது கணவரின் உடல் தேவையெனவும், தனது கணவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கொலைக்கு காரணமாணவர்களுக்கு சரியான முறையில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுமாறும் பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.