கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் 975,769 பேர் உயிரிழப்பு!!

 


உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் 3 கோடியே 18 இலட்சத்து 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 33 இலட்சத்து 71 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 75 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் 70 இலட்சத்து 97 ஆயிரத்து 879 பேரும், பிரேசிலில் 45 இலட்சத்து 95 ஆயிரத்து 335 பேரும் ரஷ்யாவில் 11 இலட்சத்து 15 ஆயிரத்து 810 பேரும் பெருவில் 7 இலட்சத்து 72 ஆயிரத்து 896 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு தென் ஆபிரிக்காவில் 6 இலட்சத்து 63 ஆயிரத்து 282 பேரும் கொலம்பியாவில் 7 இலட்சத்து 77ஆயிரத்து 537 பேரும் மெக்ஸிகோவில் 7 பேரும் 580 பேரும் சிலியில் 4 பேரும் 48ஆயிரத்து 523 பேரும் ஸ்பெயினில் 6 இலட்சத்து 82 ஆயிரத்து 267 பேரும் ஈரானில் 4 இலட்சத்து 29 ஆயிரத்து 193 பேரும் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 2 இலட்சத்து 5 ஆயிரத்து 471 பேரும் பிரேசிலில் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 159 பேரும் கொலம்பியாவில் 24 ஆயிரத்து 570 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் மெக்ஸிகோவில் 73 ஆயிரத்து 697 பேரும் இத்தாலியில் 35 ஆயிரத்து 738 பேரும் பிரான்ஸில் 31 ஆயிரத்து 416 பேரும் ஈரானில் 24 ஆயிரத்து 656 பேரும் ஸ்பெயினில் 30 ஆயிரத்து 904 பேரும் ரஷ்யாவில் 19 ஆயிரத்து 489 பேரும் சிலியில் 12 ஆயிரத்து 321 பேரும் பிரிட்டனில் 41ஆயிரத்து 825 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.