நாகங்களின் நாக்கு பிளந்திருப்பது ஏன்!!


 ஒரு முறை காசிபரின் மனைவிகளான கருடனின் தாய் வினதை மற்றும் நாகர்களின் தாய் கத்ரு வனத்தில் சென்று கொண்டிருந்தனர்.


அப்போது இந்திரனின் குதிரையின் நிறம் குறித்த விவாதத்தில். குதிரையின் நிறம் என்ன வெள்ளை என வினதையும், கத்ரு கருமை எனவும் கூறினர். சரியான நிறம் எது என சொன்னவருக்கு மற்றவர் அடிமை என ஒப்பந்தமானது.

கத்ரு போட்டியில் வெல்வதற்காக சூழ்ச்சி செய்து, தேவலோகத்தில் உள்ள குதிரைகளைக் கருநாகங்கள் சூழ்ந்து கொள்ளுங்கள். அப்போது, குதிரைகள் பார்க்கக் கருமையாக தெரிய கத்ரு வெற்றி அடைந்தததாகக் கூறி வினதையை அடிமைப்படுத்தினாள்.

அதையடுத்து வினதை தன் குழந்தைகளான கருடன், அருணனுடன் நாகர்களின் தாய் கத்ருக்கு அடிமையானார்கள்.

அதன் பிறகு, கத்ரு வினதையின் குழந்தைகளிடம், “நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால் தேவலோகத்தில் உள்ள அமிர்தக் கலசத்தை எங்களுக்குக் கொண்டு வந்து தர வேண்டும்” என கட்டளையிட்டனர்.

அதன்படி தேவலோகத்திற்கு சென்ற கருடன், அங்கிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்து நாகர்கள் முன் தர்ப்பை புல் மீது வைத்தார்.

அதையடுத்து வினதை, கருடன், அருணன் கத்ருவிடமிருந்து விடுதலை ஆனார்கள்.
நாகர்கள் குளித்துவிட்டு அமிர்தத்தைப் பருக நினைத்து குளித்துவிட்டு வரும்போது, இந்திரன் அந்த அமிர்த கலசத்தைத் தூக்கிச் சென்றுவிட்டார்.

அமிர்தக் கலசம் இருந்த புல்லை சுவைத்தால் பலன் கிட்டிவிடுமோ என்ற ஆவலில் தர்ப்பைப் புல்லை நாகங்கள் தங்களின் நாக்கால் நக்கியதால் பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுபட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.