கவிஞர் வாலி - கவிதை!!


 காவிரி தந்த காவியக் கவிஞன்

திருப்பராய்த்துறையில் தாவிய கலைஞன்
விரல் வித்தையிலோ ஓவியக் கலைஞன்
எதுகை மோனையைப் பாவிய கவிஞன்.
பாவினங்களைக் கூவிய கவிஞன்.
கூரிய சொல்லால் மேவிய கவிஞன்...

தரையிலும் ஜொலித்தவன்...
திரையிலும் ஜொலித்தவன்...

கண்ணதாசனிடம் கவிதையை வரித்தான்.
அவனுக்கு எதிரிலே தமிழ்க் கடையை விரித்தான்.
தனித்தமிழ் நடையை கவிதையில் பிரித்தான்...
எதிராய் நின்றவரை எழுத்திலே எரித்தான்...

காவியம் எழுதி
பண்பை நிறைத்தான் ...
கலைஞரை எழுதி
தன்பை நிறைத்தான்...

நிறை குடமாய்த் தன் பாட்டில் வேண்டியதை வரித்தான்
இலக்கணத்தைக் கவிநடையில் மனம்போலப் பிரித்தான்...
இல்லற வாழ்வு இல்லாமலே சிரித்தான்...
பசிக்குத் தமிழையே உண்டு செரித்தான்...

இவன் பேனாவில் நிக்கல் இருந்தது
இவனைப் புரிவதில்
சிக்கல் இருந்தது.

கம்பரசம் எழுதி
காமரசமும் விளித்தான்...
மனத்துக்கு ஒன்று
பணத்துக்கு ஒன்றாய்.

மனையின்றி வாழ்ந்த இவனின் எழுத்துக்கள்
துணையின்றி வாழ்ந்தவரை
துள்ளி எழ வைத்தது.

திருவரங்கம் பெற்றிடக்
கவியரங்கம் செற்றவன்
அகவை எண்பத்தொன்றில்
அருளரங்கம் உற்றவன்...!

- ஆ. கிஷோர்குமார்.


Blogger இயக்குவது.