இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு விளக்கமறியல்!!

 


ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர், ஜகத் சமந்த சிலாபம் நீதிமன்றில் இன்று சரணடைந்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் ஆனைவிழுந்தான் ஈரநிலப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத துப்புரவு நடவடிக்கை தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் சிறப்புப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.

இறால் வளர்ப்பிற்காக ஈரநிலத்தின் ஒரு பகுதியை துப்புரவு செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் நிஷாந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தின் சந்தேகத்தில் முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஜகத் சமந்தவை கைதுசெய்யுமாறு சிலாபம் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய, அவர் இன்று சிலபாம் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.