பசித்திருக்கிறான் பார்த்தீபன்!!
தாயக வேள்விக்காய்
தன்னுயிர் ஈந்தவன்
தானைத் தலைவரின்
தம்பியாய் ஆனவன்,
கோலத் தமிழினம்
காத்திட நின்றவன்
நியாயத்தின் பாதையில்
ஆகுதி ஆனவன்
எங்களின் பார்தீபன்......
புன்னகை பூத்தபடி
பூத்தே இருந்தவன்.
காந்தீய முகத்திரையை
கண்ணெதிரே கிழித்தவன்.
சாகவில்லை எங்கள்
கந்தர்வ நாயகன்,
சரித்திரம் படைத்திட்ட
மாவீரத் தாரகன்,
தமிழ் மனமெல்லாம்
தத்தளித்தது இவனுக்காய்...
ஊனுருகி உயிர்
துடித்தது, இந்நாளில்...
பசி கிடந்த பிள்ளை
ஆவி அடங்கியது..
அன்னை தமிழவளும்
அழுது துடித்தாள்.....
பசிப்போர் நடத்தியவன்
விழி மூடிக்கொண்டான்.
பழி சுமந்து நின்றது
பாரத தேசம்
இவன் எங்கள் கடவுளன்றோ.....
அவனி உள்ளவரை
அழியாது அழியாது
பார்த்தீபன்
பதித்த யாகம்......
பார்த்தீபன் இன்றும்
பசியோடு தானிருக்கிறான்........
தமிழரசி
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை