மணலில் சிற்பமாக வடிவமைத்து எஸ். பி. பிக்கு அஞ்சலி!!

 

Add caption

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க பங்கேற்றிருந்தனர்.

எனினும், குறித்த இறுதிக் கிரியையில் பங்கேற்க முடியாமல்போன் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வெவ்வேறு முறையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன், ஒடிசாவின் பூரி கடற்கரையில் எஸ்.பி.பி.யின் பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.