ராகவா லாரன்ஸ் சொல்ல வருவது என்ன!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பரில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
இந்த நேரத்தில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக நான் சமூக சேவை செய்து வருவதை அடுத்து அரசியலில் நான் நுழைய இருப்பதன் பின்னணி என்று சிலர் கூறினார்கள். மேலும் எனது நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் நான் அரசியலுக்கு வந்தால் இன்னும் அதிக நன்மை செய்யலாம் என்று அறிவுரை கூறினார்கள்
ஆனால் எனக்கு அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் இல்லை. அரசியலுக்கு வராமலேயே நான் சமூக சேவை செய்யத்தான் விரும்புகிறேன். எனக்கு நெகட்டிவ் அரசியல் என்பது சுத்தமாக பிடிக்காது. ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல் எனக்கு ஒத்துவராது
இருப்பினும் யாராவது ஒருவர் நெகட்டிவ் அரசியல் இல்லாமல் கட்சி ஆரம்பித்தால் அதில் சேர எனக்கு விருப்பம்தான். குறிப்பாக எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் அரசியல் செய்ய இருப்பதாக அறிகிறேன். அவர் கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியலில் நுழைந்தால் அவருடைய கட்சியில் சேருவேன்’ என்று கூறியுள்ளார்
எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பித்தால் அதில் ராகவா லாரன்ஸ் இணைவார் என்று தெரிய வருகிறது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை