சிறுவர் சீர்திருத்த இல்லத்திலிருந்து தப்பித்த மூவர்
மாத்தளை பகுதியிலுள்ள சிறுவர் சீர்திருத்த இல்லம் ஒன்றிலிருந்து மூன்று சிறுவர்கள் மதிலால் பாய்ந்து தப்பி செல்ல முயன்றதை வீதியில் வந்த வாகன சாரதி ஒருவர் கண்டதையடுத்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார். குறித்த சிறுவர்கள் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் இல்லத்தில் இருந்த 12, 13 மற்றும் 16 வயதான சிறுவர்களே இவ்வாறு இரவு வேளையில் மதிலால் பாய்ந்து வெளியில் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுவர்கள் அலவத்துகொட வீதியில் பயணித்த வாகனம் ஒன்றை சைகை செய்து நிறுத்தி அதில் ஏறியுள்ளனர். அதன்போது வாகன உரிமையாளர் சிறுவர்களிடம் பேசியதைத் தொடர்ந்து அவர்கள் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் செல்கின்றமை தெரிய வந்துள்ளது. அதனையடுத்து சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சிறுவர் இல்லத்திற்கு பொறுப்பான நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் இல்லத்திற்குள்ளே வெளியிலிருந்து சில நபர்கள் மதுபான போத்தல்களை வீசுவதாகவும், சில வயது கூடியவர்கள் தம்மை தாக்குவதாகவும் அதனாலேயே தப்பிச் செல்ல முயன்றதாக சிறுவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தொட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை