சுமனரத்ன தேரர் விடயத்தில் சட்டம தன் கடமைை செயய வேண்டும்!

 

இலங்கை திருநாட்டில் பல்லின மக்களை ஒன்றிணைத்து இனங்களிடையே சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக செயற்படுகின்ற அமைப்புகளில் பௌத்த மதத்தினை சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து செயற்படுவதாக மௌலவி ஷாஜஹான் தெரிவித்தார்.

போதனையை சொல்லிக் கொடுக்கும் நாங்கள் பிரச்சினைகளுக்கும் கலவரங்களுக்கும் முன்னணியில் இருந்தால் இந்த மாவட்டத்தில் மிகவும் ஒரு சிக்கலான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு வழியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பல் சமயங்களின் ஒன்றியமானது நேற்று அவசரமாக ஒன்று கூடி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பன்குடாவௌி எனும் கிராமத்தில் சமூகதிற்கு ஒவ்வாத சட்ட ஒழுங்குக்கு மாறாக நடந்து கொண்ட விடயம் தொடர்பாக ஆராய்ந்தது.

அதனடிப்படையில் விசேட ஊடகவியலாளர் மாநாட்டைனை கூட்டி தேரர் தொடர்பில் மதத்தலைவர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

பஞ்சசீல கொள்கையினை புத்தபெருமான் போதித்தததை மக்களுக்கு போதிக்கும் பௌத்த தேரர்கள் உங்களது மனப்பாங்கினை மாற்றிக் கொண்டு சமாதானத்திற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என இங்கு கருத்து தெரிவித்த சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள் தெரிவித்தார்.

அம்பிட்டிய சுமனரத்ன தேரரை மதத்தலைவர்கள் சென்று சந்தித்து கதைப்பதற்கு அச்சம் கொள்ளும் நிலையே இருந்துவருவதாக இங்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜோசப் மேரி தெரிவித்தார்.

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளை சுமனரத்ன தேரர் சந்திக்கவிரும்பியபோது அவரை தான் அழைத்துச்சென்று அவர்களை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

சுமனரத்ன தேரர் தொடர்பில் சட்டம் தன் கடமையினை செய்ய வேண்டும், இல்லாதுவிட்டால் அவர் தொடர்பில் பௌத்த பீடங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

சிறந்த மதத்தின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வது அனைத்து மததத்தலைவர்களுக்கும் இழுக்கான செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.