விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் - மேதானந்த தேரருக்கு சிவஜானம்
தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.கே.சிவஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சி.வி.கே.சிவஜானம் மேலும் தெரிவிக்கையில் தமிழர்களுடைய பூர்வீகங்கள் இந்து ஆலயங்கள் பரவிக்கிடக்கின்றன. இலங்கை பூராகவும் உலகம் பூராகவும், அதிலும் வடக்கு கிழக்கில் வரலாறுகள் கல்வெட்டுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன - ராஜீவ் காந்தி ஒப்பந்தத்திலே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று ரீதியான வாழ்விடம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த எல்லாவல மேதானந்த தேரரை விட ஆயிரம் மடங்கு வரலாறு தெரிந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். வரலாற்று ரீதியாக ஆவண ரீதியாக இந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. அதனைவிட வேறு எந்த ஆவணம் வேண்டும் இந்த எல்லானந்த தேரருக்கு இது ஏற்கனவே எப்போதுமே நான் பேசிக் கொண்டு இருக்கின்ற ஒரு விடயம் அதைத்தான் விக்னேஸ்வரனும் தனது கருத்தாக தெரிவித்திருக்கின்றார்.
அவர் புதிதாக எதையும் இறக்குமதி செய்து கூறவில்லை அவர் வரலாற்றைத்தான் தெரிவித்திருந்தார். ஆனால் தற்பொழுது நாங்கள் கெட்டிக்காரர்கள், சிங்கள ஏகாதிபத்தியம், சிங்கள மேலாதிக்கம் ஒரு மொழி, ஒரு இனம் வாடகை வீட்டில் குடியிருப்போர் என்று பல்வேறுபட்ட கருத்துகளை தென்னிலங்கையில் தெரிவித்து வருகின்றார்கள். எனவே வரலாற்று ரீதியாக நாங்கள்தான் பூர்வீக குடிகள் அது பெரிய விடயமுமில்லை.
கடந்த 2000 ஆண்டுகளாக சிங்களவர்களும் தமிழர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நான் பெரிது நீ பெரிதென்று இல்லாமல் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வரலாற்று ரீதியாக அவர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள் அதை வைத்துக் கொண்டு விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும், அவரது கடவுச்சீட்டைப் பறிக்க வேண்டும் என்று அச்சுறுத்தல் விடுதல் என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக காணப்படுகின்றது.
பெரிய விடயம் என்னவென்றால் கிழக்கு மரபுரிமை செயலணிக்கு அவர் ஒரு பெரிய முக்கிய உறுப்பினராகவுள்ளார் இனிவரும் காலங்களில் எவ்வாறான சிபாரிசுகளை செய்யவுள்ளார் அதிலும் தமிழருக்கு இந்துக்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவாரோ என்ற கேள்வியும் எழுகின்றது என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை