புதிதாக 5,776 பேருக்கு கொரோனா: 8,000த்தை நெருங்கிய பலி
தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இந்தியா பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,69,256 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 78,526 பேருக்கு உட்படத் தமிழகம் முழுவதும் மொத்தமாக 52,04,757 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,930 பேர் உட்பட இதுவரை 4,10,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 89 பேர் உட்பட இதுவரை தமிழகம் முழுவதும் 7,925 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 51,215 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று 949 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,42,603 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 524 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-கவிபிரியா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை