கல்லீரல் கொழுப்பு : மகத்தான மறுவாழ்வு
மனித உடலில் இதயம், மூளை போன்று மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மிக மென்மையான மற்றும் மிகப்பெரிய உறுப்பாகும். உடலின் உட்புற சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர் வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல், ரத்தத்தைச் சுத்திகரிப்பது, உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை வெளியேற்றுவது ஆகிய உடலியக்கத்துக்கான முக்கிய செயல்களில் பங்கு வகிக்கிறது.
இத்தகைய முக்கிய உறுப்பான கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்போது உடலில் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். மது அருந்துவதால் கல்லீரலில் கொழுப்பு நோய் ஏற்படுகிறது. எனினும் மது அருந்தாதவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படாது என்றில்லை.
கொழுப்பு உணவுகளை உண்ணுவது, உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவற்றால் கல்லீரல் கொழுப்பு ஏற்படும். இது மது அருந்தாவகை கொழுப்பு கல்லீரல் (NAFLD) நோய் என்று அழைக்கப்படுகிறது. இதுபெரிதாக குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்தாது. வயிற்றின் மேல் வலது பகுதியில் வலி மற்றும் உடல் சோர்வு அடையும்.
இதை அப்படியே கண்டுகொள்ளாமல், சிகிச்சை பெறாமல் விட்டுவிட்டால் சிரோசிஸ், நாளங்களடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் கல்லீரல் செயல் இழப்புக்கு வழிவகுத்துவிடும்.
இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்கள் சிறந்த மருத்துவமனையைத் தேடி அலைந்து வரும் நிலையில், கல்லீரல் கொழுப்பு பாதிப்புக்கு உலகத் தரத்திற்குச் சிகிச்சை அளித்து வருகிறது சென்னை குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் டாக்டர் ரேலா மருத்துவமனை.
NAFLDக்கு மிகச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் திறன் பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ரேலாவில் பணியாற்றி வருகின்றனர். கல்லீரல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும். உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காகவே தனிச் சிறப்பு மருத்துவர்கள் குழு இயங்கி வருகிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் செயல் இழக்கும் பட்சத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்து வருகிறது ரேலா.
பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தாமல், அரவணைப்புடன் இங்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை