மக்கள் நடமாட்டம் தவிர்ப்பு - களுத்துறையில் பரபரப்பு!!
களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களுக்கு விசேட எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து விசத்தன்மை வாய்ந்த நரியொன்று திரிவது பற்றிய தகவல் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.
குறிப்பாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தனியே எந்த பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசர் நரி கடிக்கு உள்ளாகி இதுவரை இருவர் பலியானதுடன், கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனிதர்களை தனியே கண்டால் துரத்தி கடித்துவிடுவதாகவும், இரவு நேரங்களில் மக்கள் நடமாட வேண்டாம் என்றும் அந்த பிரதேச மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை