அம்மாவின் பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடிய நயன்தாரா!!

 


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவாவில் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பதும் தெரிந்ததே

நேற்று சமூக வலைதளங்களில் வெள்ளை உடையில் இருக்கும் நயன்தாரா தேவதை போல் இருந்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும், இந்த புகைப்படங்களை ரசித்து ரசித்து விக்னேஷ் சிவன் தான் எடுத்ததாகவும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்


இந்த நிலையில் நயன்தாரா தனது அம்மாவின் பிறந்த நாளை தனது காதலர் மற்றும் அம்மாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அம்மா பிறந்த நாள் கேக் வெட்ட, அதற்கு நயன்தாரா உதவி செய்வது போன்று இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் ‘ஹேப்பி பர்த்டே மை டியரஸ்ட் அம்மு... திருமதி குரியன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


இந்த பிறந்த நாள் விழாவில் விக்னேஷ் சிவன் உள்பட நயனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Powered by Blogger.