இலங்கை மருத்துவ சபையைக் கண்காணிக்க ஐவர் அடங்கிய குழு நியமனம்! 

இலங்கை மருத்துவ சபையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு இலங்கை மருத்துவ சபை தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயவுள்ளது.

குறித்த குழுவில் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்தா பெரேரா, ராகம மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிரசந்த விஜேசிங்க, வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர, வைத்திய நிபுணர் மைத்ரி சந்திரரத்ன, வைத்திய நிபுணர் தர்ஷன சிறிசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Powered by Blogger.