சங்குகளுடன் சிக்கிய நான்கு நபர்கள்!
சுமார் 06 கோடி ரூபா மதிப்புள்ள டைட்டன் ரகத்தைச் சேர்ந்த வலம்புரிச் சங்குகளுடன் 4 சந்தேக நபர்கள் காலி – இமதுவ பொலிஸாரினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை விசேட அதிரடிப் படையினரால் இமதுவ – கொந்தகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 02 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர்கள் ஹட்டன் மற்றும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இமதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை