“விஜய்… விஜய்தான்” – புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!
மறைந்த பாடகர் எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டமை தொடர்பில் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் ஒருசில சினிமாப் பிரபலங்களே கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜயும் ஒருவர். எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு நடிகர் விஜய் அங்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, எஸ்.பி சரணுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

எஸ்பிபியின் இறுதிச் சடங்கிலிருந்து திரும்பும்போது நெரிசலினால் கழட்டப்பட்டுக் கீழே கிடந்த ரசிகனின் செருப்பைக் கையால் எடுத்துக் கொடுத்துச் சென்றமையானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டமையும் யாவரும் அறிந்ததே.
“எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதை நினைத்து, அவர்மேல் பெரிய மரியாதை வருகிறது” என்று அஜித்தின் மங்காத்தா பட இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். மேலும் ஆடை பட இயக்குநர் ரத்தன் குமார் “கொரோனாவால் குறிப்பிட்ட மக்கள்தொகையே அஞ்சலி செலுத்த முடியும் என்றிருந்த போதும், நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியமை மரியாதைக்குரியது. தளபதி தளபதிதான்..” என்றுள்ளார். இதுபோன்று பல பிரபலங்களும் விஜயைப் புகழ்ந்து தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயின் படங்கள் சிலவற்றுக்கு எஸ்பிபி பாடியுள்ளதுடன், இருவரும் சேர்ந்து படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை