ஓயாத அலைகள்04 நடவடிக்கையி​ல் காவியமான 23 மாவீரர்களி​ன் நினைவு நாள்!

 “ஓயாத அலைகள்- 04” நடவடிக்கையின்போது யாழ். நாகர்கோவில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜெயசுதா) உட்பட்ட 23 மாவீரர்களினதும், அரியாலை, கல்வயல், சாவகச்சேரி பகுதிகளில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடந்த 06.10.2000 அன்று யாழ். நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது,



லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜேசுதா) (சூசைப்பமொராயஸ் ரமணி - மன்னார்)

மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி - வவுனியா)

கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் - வவுனியா)

லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி - கண்டி)

2ம் லெப்டினன்ட் அருளரசி (உதயகுமார் தவமணிதேவி - கண்டி)

2ம் லெப்டினன்ட் எழிலரசி (தங்கவேல் ஜெயசிறி - கண்டி)

2ம் லெப்டினன்ட் இளையதர்சினி (மாணிக்கம் பவானி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் குட்டிவேங்கை (சகாயநாதன் சிறேஸ் - கொழும்பு)

2ம் லெப்டினன்ட் யாழ்மதி (அருளப்பு வசந்தகுமாரி - வவுனியா)

2ம் லெப்டினன்ட் கானரசி (சண்முகநாதன் சுபாஜினி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தேன்விழி (இரத்தினம் ஜெனிதா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் அகல்யா (இராஜேஸ்வரன் கலையரசி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை குயிற்செல்வி (பதுமநிதி முகுந்தா - கிளிநொச்சி)

வீரவேங்கை மதனா (ஆறுமுகம் தனலட்சுமி - மட்டக்களப்பு)

வீரவேங்கை அறிவரசி (மாணிக்கம் யோகராணி - முல்லைத்தீவு)

வீரவேங்கை தமிழ்மொழி (தேவராசா சிறிரஞ்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை கலைச்சுடர் (நல்லதம்பி விஜயலட்சுமி - கிளிநொச்சி)

வீரவேங்கை பைந்தமிழ் (இலட்சுமன் லீலாதேவி - வவுனியா)

வீரவேங்கை குகதா (கறுப்பல் ராணி - திருகோணமலை)

வீரவேங்கை இலக்கனா (ஜீவரட்ணம் பாலசிலோஜினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை விழிக்கதிர் (இரத்தினசிங்கம் மலர்விழி - யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம் மாவீரர்களினதும் இதேநாள் சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய,

வீரவேங்கை இளங்குமணன் (தர்மகுலசிங்கம் றஜீவன் - யாழ்ப்பாணம்)

அரியாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய,

லெப்டினன்ட் திரவன் (சின்னராசா சாந்தநேசன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் கதிரெழிலன் (அந்தோனிப்பிள்ளை லங்கரூபன் - முல்லைத்தீவு)

கல்வயர் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய,

கப்டன் நிலவன் (ஆறுமுகம் சுரேஸ் - யாழ்ப்பாணம்) ஆகிய மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.