ஊரடங்கு உத்தரவுகளை மீறிய 91 பேர் கைது!

 பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இதன்போது 23 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இதேநேரம் மேல் மாகாணத்தில் நேற்று மாலை 6.00 மணி முதல் இன்று அதிகாலை 5.00 மணிவரையான காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 226 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பெரும்பாலானோர் (87 பேர்) ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கஞ்சாவுடன் 61 பேரும், சட்டவிராத மதுபானத்துடன் 54 பேருடன், ஏனைய போதைப்பொருட்களுடன் 12 பேரும், வேறு பல குற்றச் செயலுக்காக 12 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.