லிந்துலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

 நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையிலும் ஹட்டன் -  நுவரெலியா A7  பிரதான வீதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சிறுத்தை குட்டியானது வாகனமொன்றில் அடிபட்டு உயிரிழந்திருக்கக் கூடும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

இதற்கு முன் பல தடவை குறித்த தோட்டப் பகுதியில் சிறுத்தை குட்டிகள் நடமாடுகின்றன என்பது தொடர்பில் தோட்ட மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.