தாயின் புகைப்படத்தை அணைத்திருக்கும் குழந்தை!

 உடலில் உள்ள கலிபோர்னியாவில் ஆகத்து மாதம் 11அம் திகதி தன் கணவருடன் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, நடைபாதையில் ஏறிய கார் ஒன்று மோதியதில் பலியானார Yesenia Aguilar (23) என்ற இளம்பெண் குடிபோதையில் கார் ஓட்டிய சாரதியால் நிகழ்ந்த அந்த விபத்து நடக்கும்போது Yesenia 35 வார கர்ப்பிணி!

விபத்தில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Yeseniaவைக் காப்பாற்ற முடியாத மருத்துவர்கள், அவரது வயிற்றிலிருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தார்கள்.

Yesenia கற்பமாக இருக்கும்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருந்தார் அவரது கணவர் James Alvarez (36).

தற்போது Yesenia உயிரிழந்துவிட்ட நிலையில், அதே போட்டோகிராபரை வைத்து, Yeseniaவின் பொருட்களுடன் இரண்டு மாதக் குழந்தை Adalyn Rose Alvarez-Aguilarஐ வைத்து மீண்டும் ஒரு போடோஷூட் நடத்தியுள்ளார் அவர்.

தாயின் அரணைப்பில் குழந்தை இருக்கவேண்டிய நேரத்தில், அந்த தாயின் புகைப்படத்தை அணைத்துக்கொண்டிருக்கும் Adalynஐக் காணும்போது கல்மனமும் கரைந்துபோகும். என் மனைவி எனக்கு கொடுத்துச் சென்ற கடைசி பரிசு என் மகள் என்கிறார் James.

தன் மனைவி Yesenia தன்னுடன் இருந்திருந்தால் இதை விரும்பியிருப்பார் என்று கூறும் James, தன் மனைவி தன்னுடன் வாழ்ந்த வாழ்வைக் கொண்டாடுவதற்காகத்தான் இந்த போட்டோஷூட்டை நடத்தியிருப்பதாக தெரிவிக்கிறார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.