ஹயஸ் வாகனம் விபத்து! 13 போ் காயம்!

 கொக்கல்ல பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை அழைத்து சென்ற ஹயஸ் பேரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 13 போ் காயமடைந்துள்ளனா்.

குறித்த விபத்து இன்று(09) காலையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 12 ஊழியர்களும் ஹயஸ் வாகன சாரதியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஜாா் தொிவித்தனா்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேரூந்து, பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நின்ற வேளையில் பின்னால் வந்த மேற்குறிப்பிடப்பட்ட ஹயஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேரூந்தின் பின்புறம் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.