மரம் முறிந்து மூன்று வீடுகள் சேதம்!

 ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா பட்டல்கெலே தொழிற்சாலைப் பிரிவில் பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியொருவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகளுக்கு கீழ் பகுதியில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

இம்மரம் வீழ்ந்ததில் சுவர் இடிந்து கட்டிலில் வீழ்ந்ததில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கல்வியியல் கல்லூரி மாணவி காயமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.