பொரளை பி.சி.ஆர். பரிசோதனைகளில் யாருக்கும் தொற்றில்லை - ருவன் விஜேமுனி

 பொரளையில் நேற்று செவ்வாய்கிழமை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர் உள்ளிட்டோருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்கள் யாரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மினுவாங்கொடை தொற்றுக்கு பின்னர் கடந்த 8 நாட்களில் கொழும்பில் 2584 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பி.சி.ஆர். பரிசோதனைகளை விஸ்தரிப்பதன் மூலம் எமது பிரதான இலக்காகக் இருப்பது சமூகத்தில் தொற்று பரவியுள்ளதா என்பதை இனங்காண்பதாகும்.

எனினும் இன்று புதன்கிழமை வரை கொழும்பில் 11 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொற்றுடன் தொடர்புடையவர்களாவர்.

புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் 215 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப் பெறும். இதுவரையில் கொழும்பில் சமூக தொற்று ஏற்படவில்லை. ஏற்படுவதற்கான அச்சுறுத்தலும் இல்லை.

பொரளையில் சில கடைகள் மூடப்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் யாரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற முடிவுகள் கிடைத்துள்ளன என்றார். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.