ஆடைத் தொழிற்சாலை முகாமையாளருக்கும் கொரோனா!

 மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் மையமான ஆடைத் தொழிற்சாலையின் முகாமையாளர் வெலிகமவில் உள்ள மேரியட் ஹோட்டலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையின் முகாமையாளர் கடந்த ஒக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில்குறித்த ஹேட்டலுக்கு சென்று வந்ததாகவும் வெலிகம நகராட்சி மன்றத் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு ஹோட்டல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து ஊழியர்களையும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் அனைத்து ஊழியர்கள் மற்றும் விருந்துனர்களையும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.