ஷஹ்ரானின் திட்டத்தை 15 ஆயிரம் பேர் அறிந்திருந்தனர்!


 

ஈஸ்டர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்த ஷஹ்ரான் ஹசிம் திட்டமிருந்ததை சுமார் 15000 பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (19) சாட்சியமளிக்கும் போதே அவர் இந்த விடயம் தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 11ம் திகதி வரை இந்த தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தாக அவர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தை பொறுப்புடன் கூறுகின்றீர்களா என ஆணைக்குழுவின் நீதிபதி இதன்போது வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், மேல் மாகாணத்திலுள்ள சுமார் 8000 அதிகாரிகளுக்கு அறிவித்ததாக பொலிஸ்மா அதிபர் ஏற்கனவே ஆணைக்குழுவில் தெரிவித்ததாகவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கலாக சுமார் 15000 பேர் தாக்குதல் குறித்து அறிந்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.