இணையவாசி ஒருசரால் விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல்!!

 


விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர்வாசி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அண்மையில் தனிப்பட்ட ஒருவரை விமர்சிக்க அவர்களின் குடும்பங்களை இழுத்து மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகியுள்ளன.


நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனையடுத்து இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதுகுறித்து விஜய்சேதுபதி கருத்து எதுவும் தெரிவிக்காமல் தவிர்த்து வந்த நிலையில் இறுதியாக அப்படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகியுள்ளார்.


இந்நிலையில், விஜய்சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர்வாசி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் ரித்திக் என்ற பெயர் கொண்ட நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


திமுக எம்.பி செந்தில்குமார் பாடகி சின்மயி உட்பட பலரும் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.