அடுத்த ஆண்டு 15 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்படுவார்கள்!

 கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி நேற்று (07) வௌியிட்ட அறிக்கையில், கொரோனா இவ்வாண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாகவும் உலகம் முழுவதும் 1.4 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் விழக்கூடும் எனவும் உலக வங்கியின் குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியுள்ளார்.Blogger இயக்குவது.