யுத்த காலத்தில் தேவைப்பட்ட எம்மை புறக்கணிப்பதேன்!

 வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும் (08) நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த சுகவீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக, சுகாதார சேவைகள் சாரதிகள் எட்டு மாகாணத்திலும் இல்லாத நடைமுறை வடமாகாணத்தில் மட்டும் ஏன்?,

வடமாகாண சுகாதார சேவைகளின் சாரதியை இடமாற்றுவதை உடன் நிறுத்து, யுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்?, போன்றவாறான பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.Blogger இயக்குவது.