ஒரு நாள் பிரதமரான 16 வயது சிறுமி!

16 வயது சிறுமியை ஒரு நாள் பிரதமராக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அந்நாட்டு பிரதமர் அழகு பார்த்த வைத்த சம்பவம் எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்கிற பெண் தலைவர் பிரதமராக உள்ளார்.இவர் ஆண், பெண் என்ற பாலின இடைவெளிகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல முயற்சிகளை கையில் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் இந்நோக்கத்திற்காக ஒருபடி மேலே போய் அவர் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்து அசத்தியுள்ளார்.

 16வயது சிறுமி ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாத நிலையிலும் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை பிரதமர் சந்தித்தார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிறுமி ஆவா முர்டோவை ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்து உள்ளது.

அவ்வகையில் பின்லாந்தில் 4வது ஆண்டாக இம்முறை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் பேசுகையில்,

தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக இறுப்பதை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறினார்.மேலும் அவர் இவை நாடுகளுக்கு இடையே அல்லது சமூகங்களுக்குள் டிஜிட்டல் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.