ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

 எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 19 -26) வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தப்படுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளதாவது,

ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சான்றிதழுடன் காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கிராம சேவகர் அல்லது அதற்கு பதிலாக அந்தந்த மாவட்ட செயலக அலுவலகங்களில் உள்ள தேசிய அடையாள அட்டை (என்ஐசி) கவுண்டர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

"ஒரு நாள் மற்றும் ஒரு திகதியை முன்பே முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாள் சேவை நடைபெறும். அந்த விண்ணப்பங்கள் இலவசமாக செயல்படுத்தப்படும். அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு தபால் வழியாக அனுப்பப்படும், ”என மேலும் தெரிவித்துள்ளார்.

"இருப்பினும், அவசர சூழ்நிலைகளில் தங்கள் அடையாள அட்டை தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பரீட்சைகளுக்கு அடையாள அட்டை வழங்குவது மற்றும் கடவுசீட்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற அவசர சூழ்நிலைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் 011 5 226 126, 011 5 226 115, 011 5 226 100, 011 5 226 150 இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு, ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"மக்கள் தங்கள் விண்ணப்பங்களை நேரில் ஒப்படைக்க பிரதான அலுவலகத்துக்கு செல்ல முடியாது. ஆட்பதிவுத் திணைக்களத்தை மூடுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள வேலைகள் இந்த காலகட்டத்தில் நிறைவடையும்" என்று அவர் கூறினார்.

சேவைகள் தொடர்பான மேலதிக விவரங்களை பெற மக்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்கள் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.