மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

 யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் மதில் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த நபர் நெல்லியடி பகுதியை பிறப்ப்பிடமாகவும் தற்போது திருமணமாகி அரியாலை நாவலடி பகுதியில் வசித்து வருபவருமான 45 வயதுடைய நபரே நேற்று காலை அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு மதில் இடிந்து விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மேலும் இவருடன் வருகை தந்து மணல் அகழ்வில் ஈடுபட்டதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவருடன் இணைந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் விசேட அணியினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.