மேலும் 73 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலில் மேலும் 73 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 73 பேரில் 71 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஆவர்.

ஏனைய இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள்.

இதன் மூலம் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,972 ஆக காணப்படுவதுடன், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,427 ஆகவும் பதிவாகியுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.