ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு எனக்கு அவசியம் தேவை - க . கருணாகரன்

 ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும்.  இதற்கு முதல் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கி வந்தீர்களோ அதேபோன்று எனக்கும் ஒத்துழைப்பை தரவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். என மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது பதவியை பொறுப்பேற்ற பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

 இது நான் விரும்பி அழுத்தங்களைப் பிரயோகித்து எனக்கு வழங்கப்பட்ட பதவியல்ல  காலத்தின் நிமித்தம் எனக்கு வழங்கப்பட்டது.

 இந்த பதவியை  வெற்றிகரமாக செய்வதற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க அனைரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதில் எந்த சிந்தனையும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

  ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும்  உங்களுக்கு நடந்த அச்சுறுத்தல்களும் எனக்கு தெரியும் .

 உயர்பதவியில் இருந்த நான் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தேன்  உங்களுடைய ஒத்துழைப்பும் எனக்கு அவசியமாக தேவை.

  புதிய அரசாங்கம் புதிய போக்கு  புதிய பார்வை புதிய சிந்தனை என உங்கள் அனைவருக்கும் தெரியும் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என அவர் மேலும் தெருவித்துள்ளார்
Blogger இயக்குவது.