கொவிட்-19 தொடர்பில் நாடு ஆபத்துக்குள் தள்ளப்படும்!

 


கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தற்போதைய நிலையில் கொவிட் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை வரைபடமாக அடையாளமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என அந்த சங்கம் கோரியுள்ளது. 


எனினும் இது தொடர்பாக தொற்றுநோயியல் ஆய்வு பிரிவு இன்னும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்தார். 


இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொவிட் - 19 வைரஸ் பரவல் சமூகத்தில் பரவவில்லை எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.