பிரான்ஸ் தலைநகரில் ஆசிரியை தலை துண்டித்து தீவிரவாத தாக்குதல்!

 பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடமேற்கு புறநகர் பகுதியில் ஒரு ஆசிரியை தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட ஆசிரியை முஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டியதாகக் கூறப்படுகிறது. ஆசிரியை கொன்ற தாக்குதல்தாரியை பொலிசார் சுட்டுக் கொன்றனர்.

கருத்து சுதந்திரத்தை கற்பித்தாற்காக ஆசிரியை கொலை செய்யப்பட்டார் என மேக்ரோன் கூறியுள்ளார்.

அவர்கள் வெல்ல மாட்டார்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சம்பவ இடத்திற்கு வந்த ஜனாதிபதி கூறினார்.

உள்ளூர் நேரப்படி சுமார் 5 மணிக்கு பள்ளி அருகே இந்த தாக்குதல் நிகழ்ந்தது. சம்பவம் பயங்கரவாத தடுப்பு வழக்குரைஞர்கள் விசாரித்து வருகின்றனர்.

தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்ய முயன்ற போது தாக்குதல்தாரி அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் குறித்து எந்த தனிப்பட்ட விவரங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.