2000 ஐ கடந்தது மினுவாங்கொடை கொத்தணிப் பரவல்!

 நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 42  பேரும்  மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

தனிமைப்படுத்தலில் இருந்த 22 பேருக்கும்  அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும்  2,014 ஆக அதிகரித்துள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.