“சாகப் போறீங்க” விமானத்தில் பயணிகளை மிரட்டிய பெண்!பிரித்தானியாவின் பெல்-பாஸ்ட் விமான நிலையத்தில் இருந்து எடின்பர் விமான நிலையம் நோக்கி பயணிக்க இருந்த விமானத்தினுள். முக கவசம் அணியாமல் ஒரு பெண் ஏறியுள்ளார்.

இதனை அவதானித்த பணிப் பெண் அவரை முக கவசம் அணியும் படி கூறியபோது அவர் அதனை அணிய மறுத்ததோடு, இருமிக் காட்டியுள்ளார்.

இதனையடுத்து அவரை விமானத்தில் இருந்து வெளியேறுமாறு பணிப் பெண் கூறவே, அனைவரையும் பார்த்து நீங்கள் எல்லோரும் இன்று இறக்கப் போகிறீர்கள் என கூறியவாறு. வேண்டும் என்றே இருமிக் கொண்டு குறித்த பெண் பெண் இறங்கிச் சென்றமை பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Blogger இயக்குவது.