“20” தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு!“முன்மொழியப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில உட்பிரிவுகள் நாடாளுமன்றத்தில் முழுமையான பெரும்பான்மையுடனும் – பொது வாக்கெடுப்பினாலும் நிறைவேற்றப்பட வேண்டும்”

இவ்வாறு உயர் நீதிமன்றம் தீர்மானித்து உள்ளது என்பதை சபாநாயகர் லக்ஷ்மன் யாப அபேவர்த்தன இன்று (20) சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அதன்படி சில உட்பிரிவுகளில் முரண்பாடுகள் இருந்தாலும், குழு மட்டத்தில் முரண்பாடான உட்பிரிவுகள் திருத்தப்பட்டால் பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

Blogger இயக்குவது.