ISO தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்!


 ஸ்ரீலங்கா  இன்சூரன்ஸ்எஸ்.ஜீ.எஸ்.லங்காவிடமிருந்து மீண்டும்   ISO 9001:2015 தரச்சான்றிதழ்களை தனதாக்கிக் கொண்டதோடு இலங்கையில் ISO தரச்சான்றிதழையுடைய ஒரேயொரு காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையையும் கொண்டுள்ளது.  ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் 2009ஆம் ஆண்டு  ISO 9001:2008 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளதோடு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ISO 9001:2015 தரச்சான்றிதழை சுவீகரித்தது.

ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ்பிரதான கிளை மற்றும் ஏனைய கிளைகள் அனைத்தும்     ISO  9001:2015 தரச்சான்றிகழுக்கான தகைமைகளைக் கொண்டுள்ளதோடு இத்தரச்சான்றிதழ் 2023ஆம் ஆண்டு வரை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியிலான வாடிக்கையாளர் பற்றிய நோக்கு, தலைமைத்துவம், நபர்களுக்கிடையிலான தொடர்பு, செய்முறை நுழைவு, மேம்படுத்தல், சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுத்தல் மற்றும் தொடர்பாடல் முகாமைத்துவம் என்பன  ISO  9000 தர முகாமைத்துவ அடிப்படை தத்துவமாகும்.

இத்தரச்சான்றிதழின் தத்துவத்தை மையமாகக் கொண்டே ஸ்ரீலங்கா  இன்சூரன்ஸின் பிரதான கிளை மற்றும் ஏனைய கிளைகள் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத மீள்காப்புறுதி, உரிமைக்கோரல் மற்றும் ஏனைய சேவைகளை வழங்கி வருகின்றன. 

ISO  9001:2015 தரச்சான்றிதழ் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் குறித்த நிறுவப்பட்ட   ஒழுங்குமமுறை தேவைகளை நிறைவேற்றும் வகையில் உற்பத்திகள்  மற்றும் சேவைகளை என்றும் வழங்குவதற்காக நிறுவனமொன்றுக்கு காணப்படும் திறனை  பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தர முகாமைத்துவ தரவுகளின் தேவைகளை கண்டறிதோடு தரவுகளை மேம்படுத்துவதன் ஊடாக வாடிக்கையாளர் சேவைகளுக்கு மற்றும் குறித்த நிறுவப்பட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கேற்றவாறு பயனுள்ள விதத்தில் தரவுகளை திட்டமிடல் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை உயர்வடையச் செய்வதை நோக்காகக் கொண்டுள்ளது. 

1962ஆம் ஆண்டு தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்த  ஸ்ரீலங்கா   இன்சூரன்ஸ் இந்நாட்டிலுள்ள பாரிய அரசசார்புடைய காப்புறுதி நிறுவனமாகும்.  தற்பொழுது 211 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ளதோடு 116 பில்லியனுக்கும் அதிகமான ஆயுள் காப்புறுதி நிதியைக் கொண்டுள்ள ஒரேயொரு நிலையான காப்புறுதி நிறுவனமாகும்.  அத்துடன் நாட்டின் முன்னணி நிதி நிறுவனமாவதோடு AAA(lka) பிட்ச் தரநிலைப்படுத்தலைக் கொண்ட ஒரே உள்நாட்டு காப்புறுதி நிறுவனமாகும். முக்கியமாக பிரேண்ட பைனான்ஸினால் 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த மூன்று நாமங்களில ஒன்றாக இடம்பெற்றதோடு       இலங்கையில      ; பிரபல காப்புறுதி நாமமாகவும் இடம்பெற்றுள்ளது.  நாடு முழுவதும் 158 கிளை வலைமைப்பைக் கொண்டு சிறந்த வாடிக்கையாளர் சேவையாற்றி வருகின்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.