தரமான முகக்கவசங்களை 20 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டம்!
தரமான முகக்கவசங்களை 20 ரூபாவிற்கு விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தப்படி, ஒரு முன்னணி தனியார் நிறுவனம் முகக்கவசங்களைத் தயாரித்து அவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மக்களிற்கு கிடைக்கச் செய்யும்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில், கடந்த காலங்களில் முகக்கவசங்கள் மாறுபட்ட விலையில் விற்கப்பட்டன. இதனால் நுகர்வோருக்கு சிரமமாக இருந்தது. இந்த நடவடிக்கையின் மூலம் முகக்கவசங்களுக்கான கறுப்பு சந்தை விலை நீக்கப்படும். சில நிறுவனங்கள் குறைந்த தரம் வாய்ந்த முகக்கவசங்களை ரூ .45-50 க்கு இடையில் விற்றதாகவும் கூறினார்.
இனிமேல் ரூ .20 க்கு பாதுகாப்பான முகக்கவசங்களை மக்கள் கொள்வனவு செய்ய முடியுமென்றார். அதே நேரத்தில் அரசு நிறுவனங்களிற்கு ரூ .17.50 க்கு முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை