யாழ் பல்கலைகழக மாணவர்கள் 21 பேருக்கு வகுப்புத்தடை!

 யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மாணவர்களின் அட்டகாசத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 21 மாணவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.

கலைப்பீடத்தின் 2ஆம், 3ஆம் வருடங்களை சேர்ந்த மாணவர்களே வகுப்பு தடைக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு மாணவர்களிற்கு வகுப்பு தடை அறிவித்தல் அனுப்பப்பட்டது.

கலைப்பீட சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பல்கலைககை துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராசாவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.