இலங்கையில் ஆபத்தான நிலையில் 50 ஆயிரம் பணியாளர்கள்!

 கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் க ட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 50,000 பணியாளர்கள் பாதுகாப்பாற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் வர்த்தக வலயங்கள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த்தொற்றுகள் இருப்பதால் வர்த்தக வலயத்தின் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளன, ஆனால் கிட்டத்தட்ட 270,000 ஊழியர்கள் கடுமையான அமைதியின்மை மற்றும் நெருக்கடி நிலையில் உள்ளனர்.

நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மேலதிகமாக ‘மேன் பவர்’ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்பில் தெளிவான தகவல்கள் நிறுவனத்திடம் இல்லை என்பதனால் மினுவாங்கொட தொழிற்சாலை ஊழியர்களுடன் பழகியவர்களை கண்டுபிடிக்க தாமதமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.