மனைவியை தாக்கிய கணவன் கைது!
திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கியவர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில் கடும் பசி காரணமாக தனது மனைவியிடம் உணவு கேட்டுள்ளார். மனைவி உணவு செய்யவில்லை என்றவுடன் அவரை மூர்க்கத்தனமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அயல் வீட்டார்களினால் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 28 வயதுடைய கணவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் மனைவி மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை