சஹ்ரான்குழு பயன்படுத்திய வாகனம் மீட்பு!
உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் குழுவைச்சேர்ந்த முகமது கனிபா முகமது அக்கிரம் என்பவருக்கு சொந்தமான டொல்பின் ரக வேன் ஒன்று அட்டாளைச்சேனையில் பகுதியில் வைத்து குற்றவியல் பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வேன் கடந்த மாதம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனையில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று வியாழைக்கிழமை (22) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ் வேன் முகமது கனிபா முகமது அக்கிரமினால் நுவரேலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்பில் 25 ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் பெயரில் வாங்கப்பட்ட பயன்படுத்தப்பட்டு வந்த எவரி ரக கார் ஒன்று காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசார் மீட்டிருந்தனர்.
இதனையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையில் பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் மேற்குறித் சந்தேக நபரின் பெயரில் டொல்பின் ரக வேன் ஒன்றும் இருப்பதாக கண்டறிந்தனர்.
இது தொடர்பான மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வேன் கண்டியில் வாகன விற்பனை நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக விற்பனைக்கு விடப்பட்டதாகவும் விற்க முடியாததையடுத்து சம்மாந்துறையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் 4ம் திகதி அட்டாளைச்சேனை 6ம் பிரிவு கோணாவத்தை வீதியிலுள்ள ஒருவருக்கு குறித்த வேன் விற்கப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவு பொலிசார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து வேனை மீட்டள்ள குற்றவியல் பிரிவு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை